Tuesday, April 22, 2008

வலி

காலகுப்பைகளை
கிளறவேண்டாம்.

துயரம் தோய்ந்த
நாட்களுக்கு
திரும்பிப்போக
விரும்பவில்லை நான்

வலியை சுவாசித்து
வலிபருகி
வலியாகவே
வாழ்ந்த நான்
அசுரவளர்ச்சி
அவசியம் அடைவேன்..

ஏனெனில்
எனது
வேர்களில்நான்
ரத்தம்
ஊற்றியிருக்கிறேன்..

பாலமுரளிவர்மன்

0 comments:


Blogspot Templates by Isnaini Dot Com and Home Design. Powered by Blogger